அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பில் கார்த்திகை மலரை அவமதித்து தயாரிக்கப்பட்ட பாதணியால் சர்ச்சை

 இலங்கை தமிழர்களின் அடையாளமாக காணப்படும் கார்த்திகை மலரை அவமதிக்கும் வகையில், முன்னணி பாதணி நிறுவனம் ஒன்று கார்த்திகை மலர்கள் பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைத்துள்ளது.


கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை பகுதியில் உள்ள காட்சியறையில் குறித்த பாதணி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளதுடன் குறித்த இந்த பாதணியை புறக்கணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும், அவ்வாறான அவமதிப்பாக செயலில் ஈடுபட்டு தமிழர்களை இழிவுப்படுத்தும் வர்த்தக நிலையங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


இந்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பலரும் எதிர்வினையாற்றியுள்ளனர். குறிப்பாக தமிழ் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராச கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


உலக அரங்கில் ஈழத் தமிழர்களின் குறியீடாக கார்த்திகை மலர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







கொழும்பில் கார்த்திகை மலரை அவமதித்து தயாரிக்கப்பட்ட பாதணியால் சர்ச்சை Reviewed by Author on May 28, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.