அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை கால்பந்து சம்மேளனத்துடன் இணைகிறது லைக்கா கால்பந்தில் புதிய புரட்சி

 லைக்கா ஞானம் அறக்கட்டளையுடன் இணைந்து இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) இலங்கையின் காற்பந்துதுறையில் ஒரு புதிய மைல்கல்லினை அடையும் முயற்சியாக 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.


இந்தப் போட்டிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று இடம்பெற்றது.


இந்த நிகழ்வில் லைக்கா குழுமத்தின் ஸ்தாபகத் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவுனருமான திரு அல்லிராஜா சுபாஸ்கரன், லைக்கா ஹெல்த்தின் தலைவரும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவுனருமான பிரேமா சுபாஸ்கரன், லைக்கா குழுமத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி, இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் மற்றும் லைக்கா குழுமத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


இவ்விடயம் தொடர்பாக லைக்கா ஞானம் அறக்கட்டளையுடன் இணைந்து இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


“ஆசியப் பிராந்தியத்தில் காற்பந்துத்துறையினை உயர்தரத்தில் வலுப்படுத்தும் நோக்கில் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி, தொழில்முறை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை இணைத்துக்கொண்டு இளம் வீரர்கள் தேசிய அணியை அடைய தெளிவான பாதையை வழங்குவதை குறித்த செயற்றிட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.


சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதே ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும்.



இலங்கை கால்பந்து சம்மேளனத்துடன் இணைகிறது லைக்கா கால்பந்தில் புதிய புரட்சி Reviewed by Author on May 27, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.