கனடாவில் பட்டமளிப்பு நிகழ்வில் இலங்கைப் படையினரை சாடிய தமிழ் யுவதி
கனடாவின் வின்ட்ஸோர் பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வில் இந்த யுவதி உரையாற்றியிருந்தார்.
இன வன்முறை
எவ்வித தடையும் இன்றி பாதுகாப்பான முறையில் கனடாவில் தாம் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
கனடாவில் பட்டமளிப்பு நிகழ்வில் இலங்கைப் படையினரை சாடிய தமிழ் யுவதி | Canadaian Tamil Woment Accuesed Sl Forces
இந்த வரப்பிரசாதம் தமது தாயக பூமியான இலங்கை மாணவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இன வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த மாணவர்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அடக்குமுறை
இன்று வரையிலும் தமிழ் மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தொடர்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பலஸ்தீனத்தில் தற்பொழுது இதே நிலைமை நீடித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காணொளிக்கு எதிர்ப்பும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சரிகா சட்டக் கல்லூரியின் கட்டக் கற்கைநெறியை பூர்த்தி செய்து பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார்.
Reviewed by Author
on
June 15, 2024
Rating:


No comments:
Post a Comment