ரணிலை ஆதரிக்க முடிவு: பொதுஜன பெரமுனவில் தயாராக இருக்கும் பெருந்தொகையானவர்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும் எண்ணிக்கையானவர்கள் தயாராக உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் முகமாக மாத்தறை கோட்டை மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது,
கடந்த இரண்டு வருடங்களாக நாம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். அப்போது நாங்கள் அரசியல் விளையாடுவதை விடுத்து ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நாட்டை முன்னோக்கி நகர்த்தினோம்.
அப்போது இருந்த பிரச்சினைகளால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது சாத்தியமில்லை என்று பலர் கூறினர். ஆனால் ரணில் அந்த சவாலை ஏற்று இரண்டு வருடங்களுக்குள் நாட்டை முன்னேற்றினார்.
பேச்சுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள தலைவர்களை எதிர்வரும் தேர்தலில் ஆதரிக்க கூடாது. நமது எதிர்காலத்தை வலுப்படுத்தக்கூடிய தலைவர் தேவை.
இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நாம் அவருக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால் இன்று நாட்டின் நிலைமை கேள்வி குறியாகி இருக்கும். எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவோம்.
அந்த பலன்களை அடுத்த இழப்பீர்களா? இல்லையேல் இப்படியே தொடரலாமா என்று யோசிக்க வேண்டும்.
இந்த நாட்டிற்கு பிரிவினைவாதிகளோ அல்லது பெருமையடிக்கும் தலைவர்களோ தேவையில்லை. மக்களுக்காக சரியான முடிவுகளை எடுக்கக் கூடிய தலைமைத்துவமே தேவை.
அத்தகைய தலைமைத்துவத்தை நாடு இன்று பெற்றுள்ளது. எனவே, ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், பொதுஜன பெரமுனவில் இருந்து பெரும் பகுதியினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளனர்.” என்றார்.
No comments:
Post a Comment