இலங்கையில் இருந்து பணிப்பெண்ணாக சென்றவரை ஆண்களுடன் உறங்க வைத்த துயரம்
இலங்கைத்தீவில் இருந்து பணிப் பெண்ணாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் வழக்கம் 1980 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்ப காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், துஸ்பிரயோகங்கள் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தது.
மேலும், நூற்றுக்கு ஒரு வீதமானவர்கள் மாத்திரமே ஏதேனும் பிரச்சினைகள் அல்லது உடல் நலக் கோளாறுகள் காரணமாக உயிரிழந்திருக்கவோ வாய்ப்பு இருக்கின்றது.
கடிதம் மூலமாக தொடர்பாடல் காரணமாக அவர்களின் உண்மை நிலை அவ்வளவாக யாருக்கும் தெரியாது. ஆனால், ஒரு சிலர் மாத்திரம் கடிதங்களில் தங்களின் நிலை குறித்து அறியத்தருவார்கள்.
தற்போது அனைவர் கைகளிலும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி இருக்கின்றமையினால், அவர்களுக்கு அங்கு காணப்படும் பிரச்சினைகளை உடனடியாக அவர்களின் உறவினர்கள், முகவர் நிலையம் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கோ தெரிவிக்கும் வாய்ப்பு மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது.
இதனடிப்படையில், பாதிப்புக்கு இலக்கான பல பெண்களின் காணொளிகளை சமூக ஊடகங்களின் வாயிலாக பார்த்திருப்போம்.
அந்தவகையில், குருநாகல் மாவட்ட முகவர் நிலையத்தினூடாக வெளிநாடு சென்ற பெண்ணொருவரின் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
குறித்த பெண் வேலை செய்யும் வீட்டில் பாரிய கொடுமைகளை அனுபவிப்பதாகவும் சம்பளம், சாப்பாடு எதுவும் தருவதில்லை எனவும், 2 வயது குழந்தை கூட அவரை தடிகள் கொண்டு தாக்குவதாகவும் அவர் குறித்த காணொளியில் கண்ணீரோடு முறையிடுகின்றார்.
யார் அந்த பெண்? காணொளியில் கூறுவது என்ன?
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். (தன்னை பற்றிய பெயர் விபரங்களை குறிப்பிடவில்லை)
இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண், அவர்களுக்கு வாழ்வதற்கு ஒரு வீட்டை கட்டிக்கொள்வதற்காகவும் பிள்ளைகளை நன்கு படிக்க வைப்பதற்காகவும் சென்றுள்ளார்.
இவர் பணிப்பெண்ணாக சென்ற வீட்டில் இவருக்கு சரியாக உணவு, உரையுள் எதுவுமே தறாத நிலையில் சம்பளப் பணத்தை வழங்குவதையும் நிறுத்தியுள்ளனர்.
குறித்த விட்டிற்கு பணிப்பெண்ணாக சென்றால் 6 இலட்ச ரூபா முற்பணமாக தருவதாக குருநாகல் முகவர் நிலையத்தில் கூறியுள்ளனர்.
மேலும், ஒன்றரை இலட்ச ரூபா சம்பளம் பெற்றுத்தறுவதாகவும் தன்னை அந்த வீட்டிற்கு அனுப்பியதாக கூறுகின்றார். ஆனால் அந்த பணம் எதுவும் அவருக்கு வழங்கப்படவில்லை.
இதுவரையில் அவர் தனது குடும்பத்துக்கு வெறும் 80,000 ஆயிரம் ரூபா பணத்தை மாத்திரமே அனுப்பியுள்ளதாக கூறுகின்றார்.
சம்பளப் பணத்தைக் கேட்டால் பிறகு பார்த்துக்கொள்வோம் என அலட்சியப்படுத்துவதாக தெரிவிக்கின்றார்.
''சரியாக தூங்குவதற்கு இடமில்லை. இரு ஆண்களின் அறையிலேயே என்னை படுக்க வைக்கின்றனர். முன்னாள் பணியாளர்களின் உடைகளையே எனக்கு அணிய தந்தார்கள். அந்த உடைகளும் தற்போது கிழிந்துவிட்டன'' எனத் தெரிவித்துள்ளார்.
முகவர் நிலையத்தில் தெரிவிப்பது என்ன?
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் குருநாகல் பகுதியில் உள்ள முகவர் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்ய முற்பட்ட போது, அதற்கு அவர்கள் சரியான முறையில் செவிமடுக்கவில்லை என தெரிவிக்கின்றார்.
அந்த முகவர் நிலையத்தின் முகாமையாளர், வாகனத்தில் சென்று கொண்டிருக்கின்றேன். முறைப்பாடு பதிவு செய்பவர் விடுமுறையில் இருக்கின்றார் எனக்கூறி அவரது தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார்.
இதனால்தான் குறித்த பெண் இந்த காணொளியை பதிவு செய்து தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த காணொளி வைரலாகியுள்ளது.
ஆனாலும் இதன் உண்மை தன்மை என்ன என்பது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment