அனுரவிற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு: ஆணைக்குழுவில் முறைப்பாடு
மடிவெல வீடமைப்புத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிராக,இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனுரவிற்கு கடவத்தையில் வசிப்பிட சொத்து உள்ள நிலையில், மடிவெல வீடமைப்புத் திட்டத்தில் அவருக்கு வீடு வழங்கப்பட்டுள்ளதாக தர்ஷன தந்திரிகே என்ற சிவில் சமூக ஆர்வலர் முறைப்பாடு செய்துள்ளார்.
முறையான நடைமுறையின்படி, மடிவெல வீட்டுத் திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வீடு வழங்கப்பட வேண்டுமானால் நாடாளுமன்றத்திலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் குடியிருப்பு சொத்து இருக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அனுரவின் கடவத்தையில் உள்ள வீடு 25 கிலோமீற்றருக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது என குறித்த சிவில் சமூக ஆர்வலர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தர்ஷன தந்திரிகே தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள சொத்துப் பிரகடனத்தின் பிரகாரம், கடவத்தை ரன்முத்துகல பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு சொத்து அவரது மனைவி பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment