அண்மைய செய்திகள்

recent
-

சாணக்கியன், சுமந்திரனின் செல்லப்பிள்ளை: செல்வராஜா கஜேந்திரன் குற்றச்சாட்டு

அரசாங்கத்தை விமர்சிப்பதன் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தன்னை தமிழ் தேசிய வாதியாக மக்கள் முன்னிலையில் காட்ட முற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அம்பாறை - கல்முனை பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அந்தக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், 

“மக்களை ஏமாற்றுவதற்காகவே இவர்கள் அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இவ்வாறானவர்களது பசப்பு வார்த்தைகளை கண்டு ஏமாற கூடாது.

எனவே, தேர்தலை பகிஸ்கரிப்பதற்கு மக்கள் தயாராக வேண்டும் . நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், சுமந்திரன் எம்.பியின் செல்லப்பிள்ளை ஆவார். 

ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் தீர்மானிக்கும் என்று சாணக்கியன் எம்.பி அடிக்கடி கூறி வருகின்றார். இவர்கள் இந்தியாவின் முகவர்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

சாணக்கியன் மும்மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர். இவ்வாறு பேசுகின்ற அவர் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசுகின்றாரா அல்லது எதிராக பேசுகின்றாரா என்பது குறித்து மக்களால் பிரித்துணர முடியாதுள்ளது.

அரசாங்கத்தை விமர்சிப்பதன் ஊடாக அவர் மக்களுக்கு தன்னை தமிழ் தேசிய வாதியாக காட்ட முற்படுகின்றார். 

மக்களை ஏமாற்றுவதற்காகவே அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டிருக்கின்றார்.

மக்கள் இவ்வாறானவர்களின் பசப்பு வார்த்தைகளை கண்டு ஏமாற கூடாது. தேர்தலை பகிஸ்கரிப்பதற்கு மக்கள் தயாராக வேண்டும் என்பதை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

எனினும் எமது தேர்தல் பகிஸ்கரிப்பு விடயத்தை இவ்வாறானவர்கள் பிரிந்து நின்றாலும் பகிஸ்கரிக்க விடமாட்டார்கள். 

நிச்சயமாக யாரோ ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவார்கள்.

தமிழ் மக்கள் தேர்தலை பகிஸ்கரிக்க கூடாது என்ற நிலைப்பாட்டை எடுக்க முடியாதவாறு வாக்களிப்பு முறைகளை எவ்வழியிலும் நடாத்தி செல்வார்கள். 

எனவே மக்கள் இவ்வாறானவர்களை நிராகரிக்க முன்வர வேண்டும்” என்றார்.




சாணக்கியன், சுமந்திரனின் செல்லப்பிள்ளை: செல்வராஜா கஜேந்திரன் குற்றச்சாட்டு Reviewed by Author on August 28, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.