அண்மைய செய்திகள்

recent
-

மன்/தட்சணாமருதமடு மகா வித்தியாலய மாணவியின் மீண்டும் இரண்டு வரலாற்றுச் சாதனைகள்.

2024 ம் ஆண்டுக்கான மாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் மன்/தட்சணா மருதமடு மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி யோகேஸ்வரன் சுடர்மதி மீண்டும் இரண்டு வரலாற்று சாதனையினை நிகழ்த்தி மடு வலயத்திற்கு பெருமையீட்டிக் கொடுத்திருக்கின்றார். 


கடந்த 20ம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரை இடம்பெற்ற மாகாணமட்ட திறனாய்வு போட்டியில் 18 வயதின் கீழ் பெண்களுக்கான 400M சட்டவேலி நிகழ்ச்சியில் கடந்த ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டிருந்த 1:12:90 நிமிடங்களில் ஓடி முடித்த சாதனையை முறியடித்து 1:11:90 நிமிடங்களில் ஓடி முடித்து புதிய சாதனையை நிகழ்த்திய தோடு 100M சட்டவேலி நிகழ்ச்சியில் கடந்த ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டிருந்த 17:03 வினாடிகளை முறியடித்து அதனை 16:90 வினாடிகளில் ஓடி முடித்து இரு நிகழ்வுகளிலும் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.


 அதனைத் தொடர்ந்து 200M ஓட்ட நிகழ்வில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டதுடன் வடமாகாணத்தில் 18 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் 725 புள்ளிகளை பெற்று சிறந்த வீராங்கனைக்கான விருதினையும் பெற்றுக்கொண்டார்.


 இது முதல் முறையல்ல .கடந்த வருடம் இடம்பெற்ற மாகாணமட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியிலும் 300 M சட்டவேலி நிகழ்வில் புதிய சாதனையை நிகழ்த்தியதோடு சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.


இதுமட்டுமல்லாது இம்மாணவி மாகாணமட்ட தைக்கொண்டோ (Taekwondo) போட்டியில் 18 வயதின் கீழ் பெண்கள் 52-55 Kg எடைக்கு உட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு முதல் இடத்தை பெற்றுக் கொண்டதுடன் கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) போட்டியிலும் கலந்து கொண்டு கடுமையான போட்டிக்கு மத்தியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது  இப்பாடசாலையின் 

மேலுமொரு சாதனையாக 14 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் 80M சட்டவேலி ஒட்டத்தில் R.வர்ஷாலினி ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட 15.02 வினாடிகள் சாதனையை முறியடித்து 14.6 வினாடிகளில் ஓடி பழைய சாதனையினை முறியடித்து கடும் போட்டிக்கு மத்தியில் இரண்டாம் இடத்தினை தழுவிக்கொண்டார்.


  A.நிஷோலினி 400M ஓட்ட நிகழ்வில் 3ம் இடத்தினையும் P.வினுசிகா 80M சட்டவேலி ஓட்டத்தில் 4ம் இடத்தினையும், K.கோணிலா ஈட்டி எறிதலில் 5ம் இடத்தினையும் S.அபிசா 400M ஓட்டப் போட்டியில் 5ம் இடத்தையும் பெற்று வட மாகாணத்தில் அதிகூடிய பத்து பாடசாலைகளில் எமது பாடசாலை பெண்கள் பிரிவில் 6ம் இடத்தை பெற்று மடு வலயத்திற்கு பெருமையீட்டிக்கொடுத்த பாடசாலையாக திறன்பட்டு விளங்குகின்றது.


2024ம் ஆண்டுக்கான மாகாண மட்ட பெரு விளையாட்டுக்களில் மன்/தட்சணாமருதமடு மகாவித்தியாலய பாடசாலைக்கு கிடைத்த வெற்றிகளாக தை கொண்டோ போட்டியில் 4 தங்கப்பதக்கங்களும் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஓர் வெண்கலப் பதக்கமும் கிடைக்கப் பெற்றதோடு, கடற்கரை கரப்பந்து மற்றும் கரப்பந்து போட்டிகள் இரண்டிலும் 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.









மன்/தட்சணாமருதமடு மகா வித்தியாலய மாணவியின் மீண்டும் இரண்டு வரலாற்றுச் சாதனைகள். Reviewed by Author on August 28, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.