மன்னார் உயிலங்குளம் வீதியில் கோர விபத்து- மூவர் படுகாயம்
மன்னார் உயிலங்குளம் பகுதியில் பட்டாரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 03 பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது
இந்த விபத்தானது இன்று (27)மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மன்னார்- மதவாச்சி பிரதான வீதி ,உயிலங்குளம் பகுதியில் நேர் எதிரே வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனத்தில் பயணித்தவர்கள் இவ்வாறு படு காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக முருங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவரும் மாந்தை மேற்கு பகுதியை சேர்ந்த ஒருவரும் என்று தெரிய வருகிறது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள் .
Reviewed by Author
on
August 27, 2024
Rating:






No comments:
Post a Comment