மன்னார் ரோட்டரி கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொலித்தீன் கழிவுகள் அகற்றும் சிரமதானப் பணி.
மன்னார் ரோட்டரி கழக அங்கத்தவர்களினால் ஜீரோ பொலித்தீன் என்னும் கருப்பொருளுக்கு அமைவாக மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி ஜே.ஆர்.எஸ்.நிலையத்திற்கு அருகில் உள்ள வாய்க்காலில் காணப்படும் பொலித்தீன் பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கண்ணாடி போத்தல்கள் என்பன அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வானது மன்னார் ரோட்டரி கழகத்தின் தலைவர் திருமலைராசா தனேஸ் தலைமையில் இன்று (28) காலையில் 7.00 மணியளவில் இடம் பெற்றது.
குறித்த சிரமதான நிகழ்வில் மன்னார் ரோட்டரி கழக அங்கத்தவர்களுடன் பாடசாலை மாணவர்களை கொண்ட ரோட்டிரக்ட் மற்றும் இன் டிரக்ட் அங்கத்தவர்களும் மன்னார் நகர சபையின் ஊழியர்களும் கலந்து கொண்டார்கள்
குறித்த சிரமதான பணிக்கான அனுசரணையை ஓப்பின் நிறுவனம் மற்றும் மன்னார் நகர சபை வழங்கியிருந்தது.
இதேவேளை இலங்கையில் உள்ள அனைத்து ரோட்டரி கழகங்களும் இன்று (28) குறித்த பொலித்தீன் கழிவகற்றல் நிகழ்வை மேற் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
September 28, 2024
Rating:







No comments:
Post a Comment