கொழும்பை அச்சுறுத்தும் பயங்கர நோய்
கடந்த வருடம் பதிவான காசநோயாளிகளின் எண்ணிக்கையில் 46 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 25 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் மட்டுமே பதிவாகியுள்ள காசநோயாளிகளின் எண்ணிக்கை இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருப்பதாக காசநோய் மற்றும் மார்பு நோய்கள் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் சமூக சுகாதார வைத்திய நிபுணர் மிசாயா காதர் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
பதிவாகியுள்ள காசநோயாளிகளில் பெரும்பாலானோர் ஆண்கள் எனவும். புகைபிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதே இதற்குக் காரணம் எனவும் வைத்திய நிபுணர் மிசாயா காதர் மேலும் தெரிவித்துள்ளார்.
Reviewed by Author
on
September 20, 2024
Rating:


No comments:
Post a Comment