15 வயது மாணவன் மாயம்: தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை
இரத்தினபுரி - கஹவத்தை - ஒப்பவத்தை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவனொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜி.விஜயகுமார் மற்றம் ரஞ்சிதமலர் ஆகியோரின் மகனான குறித்த மாணவன் (வி.பிரவின்) கடந்த 16ஆம் திகதி காலை 06.30 மணியளவில் காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன சந்தர்ப்பத்தில் குறித்த மாணவன், வெள்ளைநிற சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த மாணவன் தொடர்பில் விபரம் தெரிந்தால் 0759523250, 0768672252, 0721006689 ஆகிய இலங்கங்களுக்கு தொடர்பை ஏற்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 வயது மாணவன் மாயம்: தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை
Reviewed by Author
on
September 20, 2024
Rating:

No comments:
Post a Comment