அண்மைய செய்திகள்

recent
-

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்காக 2500 ரூபா சீருடை கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய, 2025 ஆம் ஆண்டு, அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை கொடுப்பனவு வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அறநெறி  பாடசாலை ஆசிரியர்களின் சேவையை மதிப்பீடு செய்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் வருடாந்த ஆசிரியர் கொடுப்பனவாக 5000 ரூபா தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, சீருடைக் கொடுப்பனவுடன், 2025 ஆம் ஆண்டில் ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவாக 7,500 ரூபா வழங்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.




அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி Reviewed by Author on September 14, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.