அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 34 ஆயிரத்து 913 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன்

மன்னார் மாவட்டத்தில் மிகவும் சுமூகமான முறையில் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் தற்போது வரை 34 ஆயிரத்து 913 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்   க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை (21) மதியம் 12.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

-மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 34 ஆயிரத்து 913 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.இது மொத்த வாக்குகளில் 38.53 வீதமாக காணப்படுகின்றது.மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 34 வீதமான வாக்குகளும்,நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 34 வீதமான வாக்குகளும்,முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 44 வீதமான வாக்குகளும் மடு பிரதேச செயலாளர் பிரிவில் 46 வீதமான வாக்குகளும்,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 45 வீதமான வாக்குகளும் இதுவரை பதிவு செய்துள்ளனர்.

மன்னார் மாவட்ட மக்கள் தற்போது ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.எனவே மன்னார் மாவட்ட மக்கள் நேர காலத்துடன் தாமதிக்காது உங்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களியுங்கள்.


இதனால் அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.



மன்னார் மாவட்டத்தில் இதுவரை 34 ஆயிரத்து 913 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் Reviewed by Author on September 21, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.