சிறப்பாக நடைபெற்ற ஏர் நிலம் தொண்டமைப்பின் நிறுவனர் யாழ். உரும்பையூர் து. திலக் (கிரி ) அவர்களின் " சிதறல்கள்100" கவிதை நூல் அறிமுகம்..
திருகோணமலை “அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை” கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் 15.09.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் திருகோணமலை நகராட்சி பொதுநூலக கேட்போர் கூடத்தில் சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் எழுத்தாளரரும்,
"ஏர் நிலம்" தொண்டமைப்பின் நிறுவுனருமான
யாழ். உரும்பையூர் து.திலக்(கிரி) அவர்களின் "சிதறல்கள் 100" கவிதை நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் தலைவர்
திரு.கனக - தீபகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
* நிகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சீ.மதியழகன் அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளரும் ஓய்வு நிலை ஆசிரியருமான
திருமதி கிண்ணியா சபீனா அவர்களும், சக்திfm நிறைவேற்று தயாரிப்பாளரும் அறிவிப்பாளருமான
திரு D.ஷெல்டன் அன்டனி அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
*மங்கல விளக்கேற்றலுடன்
நிகழ்வில் சிறப்பான வரவேற்பு நடனத்தை
செல்வி சுனோமியாள் சுபாசன் அவர்களும், கவிதை நூலின் அறிமுகத்தினை எழுத்தாளர்
சம்பூர் சமரன் அவர்களும் வழங்கியிருந்தனர்.
தொடர்ந்து…
* சிதறல்கள் 100 கவிதை நூலின் முதற் பிரதியினை உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் தலைவர் திரு சுந்தரம்.சிவபாலன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
* சிறப்பு பிரதிகளை பொறியியலாளர்
திரு. வேலையா சதீஸ்குமார் அவர்களும், தி/சல்லி அம்பாள் மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி. தர்மினி ரகுராம் அவர்களும், சட்டத்தரணி
திருமதி பி.ஐஸ்வர்யா, எழுத்தாளர்
திருமதி பானு.சுதாகரன் ஆகியோரும் நூலாசிரியரின் உறவினரான
திருமதி ஈஸ்வரி நாகரத்தினம் அவர்களும் பெற்று சிறப்பித்திருந்தனர்.
* இன்நூலின் நயப்புரைதனை முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் அதிபர் தேசமான்ய
“கம்பீரக்குரலோன்”
திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்கள் சிறப்புற வழங்கினார்.
* நிகழ்வினை
செல்வி அபிநயா ரகுராம் அவர்கள் சிறப்புற தொகுத்தளித்திருந்தார்.
* ஏற்புரைதனை நிகழ்நிலையூடாக
யாழ்.உரும்பையூர்
திரு.து. திலக்(கிரி) நூலாசிரியர் அவர்கள் வழங்கி சிறப்பித்திருந்தார்.
* நன்றியுரைதனை மீத்த எழுத்தாளர் திரு.ஷெல்லிதாசன் அவர்கள் வழங்கினார்.
* இந்நிகழ்வின் சிறப்பம்சமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் இருந்து எழுத்தாளர்களும், கலை இலக்கியப் படைப்பாளர்களும், சமூக ஆர்வலர்களும், கலைஞர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை வடகிழக்கு இணைந்த ஒரு கலை இலக்கிய சங்கமமாக நிகழ்ந்தேறியது.
வெளிமாவட்டங்களிலிருந்து இந்நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்தவர்கள்…
*கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாடலாசிரியரும் கவிஞருமான கவிச்செம்மல் வன்னியூர் வரன் (நூலின் பின்னட்டைக் குறிப்பை எழுதியவர்)
*கிளி/ முரசுமோட்டை மகாவித்தியாலயத்தின் ஓய்வு நிலை அதிபரும் “ஏர் நிலம்”தொண்டமைப்பின் பிரதம ஆலோசகருமான
திருமதி சூரியகுமாரி இராசேந்திரம்
*கவிஞரும், ஏர் நிலம் தொண்டமைப்பின் களத்திற்கும் புலத்திற்குமான இணைப்பாளர் மன்னார் பெனில்
*இசையமைப்பாளர், பாடகர் இசைக்கபி திரு பி.எஸ்.விமல்
*ஏர் நிலம் தொண்டமைப்பின் செயலாற்றுனரும், சமாதான நீதவானுமாகிய
திருமதி வதனா ரதீஸ்வரன்
*சமூக சேவகி
திருமதி லீனா பெனில்
*கவிதாயினியும் அறிவிப்பாளருமான
பாரதியூர் சங்கீதா
*சமூகசேவகி திருமதி மதிவதனி சந்திரன்
நிகழ்வில் கலந்து சிறப்பித்த மூத்த எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், கல்வியலாளர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள் என நிறைந்த சபையோடு நிகழ்வு இனிதே நடந்தேறியது.
இந்நிகழ்வு சிறக்க திருகோணமலை
நகரசபை பொதுநூலக பணியாளர்கள், கலை இலக்கிய ஆர்வம் கொண்ட இளைய சகோதர சகோதரிகளின் பங்கும் பெரிதும் போற்றுதலுக்குரியதாகும்.
செய்தியாக்கம்:-
திரு.கனக - தீபகாந்தன்,
தலைவர்,
“எண்ணம்போல் வாழ்க்கை”
கலை இலக்கிய மன்றம்,
திருகோணமலை.

No comments:
Post a Comment