இரண்டு நாட்கள் சந்தேகத்திற்கு இடமாக வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய போலீசார்
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இரண்டு நாட்களுக்கு மேலாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியின் முரசுமோட்டை பகுதியில் நேற்று (10) பிற்பகல் முதல் இன்று (11) பகல் வரை இந்த மோட்டார் சைக்கிள் அனாதரவாக விடப்பட்டிருந்தது.
இந்த மோட்டார் சைக்கிள் சந்தேகத்துக்கிடமான முறையிலே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை பிரதேச மக்கள் அவதானித்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கிளிநொச்சி பொலிஸார் இந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றியுள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டு கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேக கண்ணோட்டத்திலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Reviewed by Author
on
October 11, 2024
Rating:


No comments:
Post a Comment