வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்ற பஸ் விபத்து
காலி, பூஸா - வெல்லமட பிரதேசத்தில் வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்ற பஸ் ஒன்று கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரியில் இருந்து வாக்கெடுப்பு நிலையத்திற்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று புதன்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளது.
விபத்தினையடுத்து பஸ்ஸில் இருந்த வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வேறொரு வாகனத்திற்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்ற பஸ் விபத்து
Reviewed by Author
on
November 13, 2024
Rating:
No comments:
Post a Comment