அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வாக்காளர்களுக்கு என வழங்க கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொதிகள் பொலிஸாரால் மீட்பு-3 நபர்கள் கைது-அடம்பன் பொலிஸார் நடவடிக்கை.

மன்னாரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி ஒன்றினால்  வழங்குவதற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் இன்று புதன்கிழமை(13) மாலை மன்னார்-யாழ் பிரதான வீதியில் வைத்து அடம்பன் பொலிஸாரினால் வாகனம் ஒன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளதோடு மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார்-யாழ் பிரதான வீதியில்   வைத்து வாகனம் ஒன்றை சோதனை செய்த போது குறித்த வாகனத்தில் ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் காணப்பட்டது.

இதன் போது பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது குறித்த உலர் உணவு பொருட்கள் அரசியல் கட்சி ஒன்றினால் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு வரப்பட்டமை தெரியவந்தது.


இந்த நிலையில் குறித்த பொருட்களை பொலிஸார் அடம்பன் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதோடு,குறித்த வாகனத்தின் சாரதி,உதவியாளர் உள்ளடங்களாக வாகனத்தில் பயணித்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த வாகனத்தில் சுமார் 290 நபர்களுக்கு வழங்கக்கூடிய வகையில் தயார் செய்யப்பட்ட 5 கிலோ அரிசி பக்கட், 2 கிலோ மா,1 கிலோ சீனி,20 கிராம் ரிங்சோ  பக்கட் 5 வீதம் தயார் செய்யப்பட்ட கொண்டு வரப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பொருட்கள் 6 லட்சத்து 13 ஆயிரத்து 500 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டமை தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அடம்பன் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களையும்,மீட்கப்பட்ட பொருட்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்








மன்னாரில் வாக்காளர்களுக்கு என வழங்க கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொதிகள் பொலிஸாரால் மீட்பு-3 நபர்கள் கைது-அடம்பன் பொலிஸார் நடவடிக்கை. Reviewed by Author on November 13, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.