ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வேட்பாளர்கள் தமிழரசு கட்சி வேட்பாளர் செல்வராஜ் டினேஸனுக்கு ஆதரவு
எதிர்வரும் 14ம் திகதி இடம் பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் மூன்று வேட்பாளர்கள் தமிழரசு கட்சிக்கும் அதன் வேட்பாளர் செல்வராஜ் டினேசன் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை(9) மாலை வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி வேட்பாளர் செல்வராஜ் டினேசன் அவர்களின் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வேட்பாளர் ஐயாவு இராமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
இம்முறை தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்க கூடாது என்பதற்காக கட்சியில் இருந்து விலகி சட்டத்தரணியும் வன்னி தேர்தல் தொகுதியின் தமிழரசு கட்சியின் வேட்பாளருமான செல்வராஜ் டினேஸனுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வேட்பாளர்கள் தமிழரசு கட்சி வேட்பாளர் செல்வராஜ் டினேஸனுக்கு ஆதரவு
Reviewed by Author
on
November 10, 2024
Rating:

No comments:
Post a Comment