அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மக்களின் பிரதான கட்சி தமிழரசுக் கட்சி தான்!

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ். சிவகரன் தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் நேற்று (09) இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ் மக்களின் பிரதான கட்சியாக இருப்பது தமிழரசுக் கட்சி தான். அந்தக் கட்சி தான் சமஷ்டிக் கட்சி. எங்களது இந்தக் கட்சியின் சமஷ்டிக் கொள்கையை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் மனம் மாறி இப்போது எமது நிலைப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

ஆக மொத்தத்தில் இங்குள்ள பல்வேறு கட்சிகளும் சமஷ்டி என்று தானே கூறுகின்ற நிலையில் அதனை அன்று முதல் இன்று வரை கொள்கையாக வைத்திருக்கும் தமிழரசுக் கட்சிக்கே வாக்களிக்லாம். இதனை விடுத்து ஏன் மற்றைய கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.

இப்போது பலரும் மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் எனக் கூறுகின்றனர். அது எங்கள் கொள்கையில் மாற்றமில்லாது காலத்தோடு வரும் நபர் மாற்றங்களை செய்துள்ளோம். எப்போதுமே கொள்கை மாறா அடையாளம் மாறாத கட்சியாக எமது கட்சி திகழ்ந்து வருகிறது.

மேலும் இப்போது ஆட்சிக்கு வந்துள்ள ஐனாதிபதி அநுர குமார பலதையும் செய்வதாக சொல்லியிருக்கிறார். ஆகவே அவர் சொன்னதை செயலில் செய்து காட்ட வேண்டும். 

அதனைவிடுத்து அதற்கு மாறாக அவர் செயற்பட கூடாது. ஆனால் இப்போது அதற்கு மாறான நிலைப்பாடுகளை எடுத்து சறுக்கத் தொடங்கி இருக்கிறார். இவ்வாறு தாம் சொன்னதை தாமே செய்யாமல்  இருப்பது அவருக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சிங்கள பெரும்பான்மை வாக்குகளுடன் ஐனாதிபதி பதவிக்கு வந்த கோட்டபாய ராஐபக்ச இரண்டு வருடங்களில் துரத்தப்பட்டார். அதேபோல இவருக்கும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து  ஜனாதிபதியாக ஆக்கியிருக்கிறார்கள்.

அதனால் சிங்கள பெரும்பான்மை மக்களை மீறி எதனையும் செய்ய முடியாமல் தாம் சொன்னதை மீறியே செயற்படுகிற நிலைக்கு வந்துள்ளார். ஆக கோத்தபாய போல இவரும் செயற்பட முயன்றால் இவருக்கும் எத்தனை வருடங்களோ தெரியவில்லை. ஆக மொத்தத்தில் இப்போதைய ஐனாதிபதியின் செயற்பாடுகளில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றது. 

முன்னைய நல்லாட்சி காலத்தில் அரசியலமைப்பு உருவாக்கத்தில் செயற்பட்ட பல விடயங்களில் எம்மோடு இணைந்து பயணித்தவர்களாக இருகின்றனர். 

ஆகையினால் இன்று அதிகாரத்திற்கு அவர்கள் வந்துள்ளதால் அத்தகைய செயற்பாடுகள் தொடர வேண்டுமானால் முன்னர் இதனைச் செய்தவர்களையும் உள்ளடக்கி பலமான அணியாக அல்லது கட்சியாக தமிழ் மக்கள் எங்களை எங்களை அனுப்ப வேண்டும்.

அப்படி வடக்கு கிழக்கு முழுவதும் ஒரே கட்சியாக இருக்கிற தமிழரசுக் கட்சிக்குத் தான் மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள். அதே போன்று இம்முறையும் வழங்க வேண்டும்.

 எனவே கொள்கை மாறாத அடையாளம் மாறாத அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும். அப்படியாயின் இதே நிலைப்பாட்டில் பயணிக்கிற தமிழரசுக் கட்சிக்கு முழுமையான ஆதரவை தமிழ் மக்கள் வழங்க வேண்டும். 

இதேவேளை இன்னுமொரு விடயத்தை இங்கே குறிப்பிட வேண்டும். இந்தக் கூட்டம் போல பல்வேறு தரப்பினர்களும் கலந்து கொள்கிற கூட்டத்திற்கு வராமல மறைந்து ஒளிந்திருக்கும் தரப்பிற்கு பகிரங்க சவாலொன்றை விடுக்கிறேன்.

அதாவது எவருடனும் பகிரங்க விவாத்த்திற்கு நான் தயார். யாரேனும் துணிந்தால் வாருங்கள். அதனை விடுத்து ஒளிந்து மறைந்திருந்து பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

குறிப்பாக ஐக்கிய ராச்சிய என்று கத்திக் கொண்டு மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். அதில் என்ன உள்ளது. அதன் வரைவிலக்கணம் என்ன என்று தெரியாமல்  பொய்களை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.

ஏக்கிய ராச்சிய என்பதன் வரைவிலக்கணத்தை முதலில் பார்க்க வேண்டும். அது ஒற்றையாட்சி அல்ல. அதனைவிடுத்து ஒற்றையாட்சி என்று சொல்லிக் கொண்டு திரிவதில் பலனில்லை. 

இவ்வாறான நிலைமையில் தேசியம் தேசியம் என்ற ஒரு வார்த்தையை மந்திரம் போல சொல்லிக் கொண்டிருப்பவர்கள் எதற்கும் உண்மையை அறிந்து பேச வேண்டும்.

மேலும் வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என கூறிக் கொண்டு திரிபவர்கள் கடந்த தேர்தலில் தமக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை ஏன் கிழக்கிற்கு கொடுக்கவில்லை. அதனையும் யாழ்ப்பாணத்திலேயே வைத்துக் கெண்டிருந்தவர்கள் இப்போது மீளவும் இணைந்த தாயகம் பற்றி பேசெகின்றனர்.

ஆனால் எங்களது கட்சியை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு முழுவதும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதற்காக கடந்தமுறை அம்பாறைக்கு அந்த போனஸ் ஆசனத்தை வழங்கியிருந்தோம். செய்ய வேண்டியமை செய்யாமல் வெறுமனே பொய்களை கூறி கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என தெரிவித்தார்




தமிழ் மக்களின் பிரதான கட்சி தமிழரசுக் கட்சி தான்! Reviewed by Author on November 10, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.