மன்னார் தள்ளாடி சந்திக்கு அருகில் வைத்து கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது
மன்னார் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் தள்ளாடி சந்திக்கு அருகில் வைத்து மன்னார் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு உத்தியோகத் தர்களால் கேரள கஞ்சா பொதியுடன் நேற்று (18) இரவு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 04 கிலோ 315 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதி இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் L.Y.A.S.சந்திரபால வின் பணிப்பில்,பொலிஸ் அத்தியட்சகர் (1)H.M.C.P.கேரத் இன் வழி காட்டலில் மன்னார் மாவட்ட குற்றதடுப்பு தற்காலிக பொறுப்பதிகாரி உ.பொ.ப .பத்ம குமார,பொ.சா.36501 ரத்ன மணல தலைமையிலான அணியினரே மேற்படி கேரளா கஞ்சா மற்றும் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்து உள்ளனர்.
சந்தேகநபர் கள்ளி கட்டைகாடு பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.மன்னார் பொலிஸாரின் விசாரணைகளின் பின் குறித்த சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் தள்ளாடி சந்திக்கு அருகில் வைத்து கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது
Reviewed by Author
on
November 19, 2024
Rating:

No comments:
Post a Comment