வானிலை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையை ஒட்டிய கடற்பிராந்தியங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, குறித்தப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், மேற்படி கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, மீன்பிடி மற்றும் கடற்படை சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Reviewed by Author
on
January 19, 2025
Rating:

No comments:
Post a Comment