பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதை மாத்திரைகள் விற்பனை - மதவாச்சியில் சம்பவம்
மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெப்பித்திகொல்லாவ பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, கஞ்சா கலந்த மதன மோதகம் போதை மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 மற்றும் 36 வயதுடைய அடவீரகொல்லேவ மற்றும் கிரிப்பன்வெவ பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்களிடமிருந்து 1,369 கெப்பித்திகொல்லாவ போதை மாத்திரைகளை கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதை மாத்திரைகள் விற்பனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது,
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Author
on
February 10, 2025
Rating:


No comments:
Post a Comment