மகளிர் தினத்தில் பெண் பணிக்குழாம் செலுத்திய விமானம்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இலங்கை விமான சேவைகள் நிறுவனம் கொழும்பிலிருந்து தாய்லாந்தின் பேங்கொக் விமான நிலையத்துக்கு விசேட விமான சேவை ஒன்றை முன்னெடுத்தது.
சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களை கௌரவிக்கும் வகையில் விமானிகள், பணிக்குழாமினர் என அனைவரையும் பெண்களாக கொண்ட, இத்தகைய விமான சேவையை ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் வருடாந்தம் முன்னெடுக்கிறது.
இதில் தலைமை விமானி மாதவி விஜேசிங்க, துணை விமானி அயோத்யா வனசிங்கவுடன் மொத்த விமானக் குழுவினர் 8 பேர் மற்றும் 96 பயணிகள் விமானத்தில் இருந்தனர்.
அதற்கமைய, நேற்று (08) UL-405 விசேட விமானம் காலை 7.30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
March 10, 2025
Rating:


No comments:
Post a Comment