பணிப்புறக்கணிப்பை கைவிட்டது தபால் தொழிற்சங்கம்
நேற்று(16) நள்ளிரவு முதல் நடத்த திட்டமிட்டிருந்த 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு தொடர்பான தீர்மானத்தை கைவிட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
ஏழு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி 48 மணிநேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து, பணிப்புறக்கணிப்பு தொடர்பான தீர்மானத்தை கைவிட்டுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
பணிப்புறக்கணிப்பை கைவிட்டது தபால் தொழிற்சங்கம்
Reviewed by Vijithan
on
March 17, 2025
Rating:

No comments:
Post a Comment