அண்மைய செய்திகள்

recent
-

தம்பதியினரை மிரட்டி, கார், பணம், தங்க நகைகள் கொள்ளை

 கார், பணம் மற்றும் தங்க நகைகளைத் கொள்ளையிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


நேற்று (16) பிற்பகல் திருகோணமலை சங்கமித்தா கடற்கரைக்கு அருகிலுள்ள மான்களை பார்வையிடும் இடத்திற்கு சென்றிருந்த தம்பதியினரை அங்கு காரில் பிரவேசித்த மூன்று பேர் மிரட்டி, அவர்களின் கார், பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

பின்னர் இது குறித்து திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

திருகோணமலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று மாலை கிண்ணியா பாலத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34 மற்றும் 35 வயதான, திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 

கொள்ளையிடப்பட்ட கார், கொள்ளையர்கள் வந்த கார் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவை பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபரையும் சொத்துக்களையும் கைது செய்வதற்காக திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



தம்பதியினரை மிரட்டி, கார், பணம், தங்க நகைகள் கொள்ளை Reviewed by Vijithan on March 17, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.