பிரித்தானியாவின் தடை குறித்து இலங்கை அரசின் நிலைப்பாடு
இலங்கையின் முன்னாள் மூன்று இராணுவத் பிரதானிகள் உட்பட நான்கு பேர் மீது ஐக்கிய இராச்சியம் தடைவிதித்துள்ளது.
இந்நிலையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான உள்நாட்டு பொறிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
அத்துடன் , கடந்த காலங்களில் ஏதேனும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால், அவை தொடர்பில் உள்நாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
நாட்டின் முன்னாள் மூன்று இராணுவத் பிரதானிகள் உட்பட நான்கு பேர் மீது ஐக்கிய இராச்சியம் விதித்துள்ள தடைகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் எண்ட்ரூ பேட்ரிக்கிடம் இன்று (26) தெரிவிக்கும் போதே வெளியுறவு அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
Reviewed by Vijithan
on
March 26, 2025
Rating:


No comments:
Post a Comment