தமிழர் பகுதியில் வயலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்
வவுனியா தேவகுளம் வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (17) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரின் சடலம் காணப்படும் பகுதிக்கு அருகில் அவர் கொண்டு வந்த பை, பாதணி மற்றும் தலைக்கவசம் காணப்படுவதோடு குறித்த பகுதிக்கு வெளியில் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலத்தை காலை அவதானித்த ஊர் மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அவர்கள் சடலத்தை மீட்டதோடு மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
March 17, 2025
Rating:


No comments:
Post a Comment