மன்னார் மாவட்ட கழிவு முகாமைத்துவ திட்டமிடலுக்கான கருத்தாடல் கூட்டம்.
மன்னார் மாவட்டத்தில் கழிவு முகாமைத்துவத்தை வினைத்திறனாக மேற்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆரயும் கருத்தாடல் கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கணகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது
(Global Environmental Facility ) உலகளாவிய சூழலியல் வசதி செயல்திட்டத்தின் மன்னார் நிலப்பரப்பில் அறிவு முகாமைத்துவம் (knowledge Management) திட்டத்தை UNDP - Small Grant நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தும் VOVCOD மற்றும் CFCS நிறுவனங்கள் இணைந்து குறித்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
குறித்த கலந்துரையாடலில் UNDP மன்னார் நிலப்பரப்புக்கான கள இணைப்பாளர் திருமதி ஜெயவதனி மன்னார் மாவட்டத்தில் குறித்த திட்டத்தின் ஊடக மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் பற்றிய தெளிவுபடுத்தள்களை வழங்கியிருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் அறிவு முகாமைத்துவ திட்டத்தை நடைமுறைப்படுத்தும் VOVCOD நிறுவனத்தின் பிரதானி தர்மலிங்கம் கணேஸ், CFCS நிறுவனத்தை சேர்ந்த கலாநிதி சம்பா ஆகியோர் கலந்து கொண்டு திட்டம் தொடர்பிலான மேலதிக வழிகாட்டல்களை வழங்கியிருந்தனர்.
குறித்த கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், தேசிய சூழலியல் அதிகாரசபை பிரதிநிதிகள், பிரதேச செயலக பிரதிநிதிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர் MEPA உத்தியோகத்தர், மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களான MAAR, WECAN, SOBAKANKA, OPEnE, SARVODAYA, போன்ற தன்னார்வ அமைப்புக்களும், கிராமங்கள் சார்ந்த பிரதி நிதிகளும் கலந்து கொண்டு மன்னார் மாவட்டத்தில் தற்போது கழிவு முகாமைத்துவம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் கூட்டத்தில் மன்னாரில் அதிகமான கழிவுகள் சேரும் plastic கொள்கலன்கள் எவ்வாறு அகற்றப்படுகிறது. இடங்களை அடையாளம் காணுதல், அவற்றை அகற்றக்கூடிய நடவடிக்கைகளை மன்னார், பேசாலை, நானாட்டான் நகரசபை பிரதேச சபைகளின் செயலாளர்கள் சார்பில் உடனடியாக எடுக்க கூடிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் பாடசாலைகளில் சிறுவர்கள், இளையோர்கள், மகளிர் குழுக்கள் பங்களிப்புடன், கழிவு முகாமைத்துவம் பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கம் செய்தல், புதிய தொழில் நுட்ப முறைகளை உட்புகுத்தல் என்பவை பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதே நேரம் இக்கழிவு முகாமைத்துவ வழிகாட்டலின் கீழ் திட்டக்குழுக்களை நியமித்து சிறந்த வேலைத்திட்டங்களை மன்னார் மாவட்டத்தில் முன்னெடுப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதுன் எதிர்வரும் தேர்தலுக்குப் பின்னர் இத்திட்டங்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்க மாவட்டத்தின் திணைக்களங்களின் ஒத்துழைப்பையும் ஏற்பாட்டு குழுவினர் கோரியிருந்தனர்.
மேலும் மாவட்ட செயலாளர் தலைமையில், மாவட்ட சூழலியல் அதிகாரசபை அதிகாரிகள், மாவட்ட பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர்கள் இணைந்து Development plan ஒன்றை தயாரிக்க இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உப குழுக்களும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment