மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற 'விசுவாவசு' சித்திரை புத்தாண்டு சிறப்பு பூஜை.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் 'விசுவாவசு' சித்திரை புத்தாண்டு சிறப்பு பூஜைகள் இன்று (14) காலை முதல் ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
காலை 4:00 மணியளவில் சுப்ரபாதமும், 5 மணியளவில் உசற்காலப் பூசையும், 5:15 மணியளவில் சங்கற்பம், அபிஷேகமும், 6 மணியளவில் சுற்றுப் பூசைகளும், 6:15 மணியளவில் வசந்த மண்டப பூசையும் 6:45 மணி அளவில் சங்கிராந்தி அபிஷேகமும் இடம் பெற்றது.
அதை தொடர்ந்து 7:30 மணியளவில் கை விசேஷமும் வழங்கப்பட்டு 8:15 மணியளவில் பொங்கல் வழந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் இடம்பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அடியவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் மாவட்டத்தின் பல பாகங்களில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட புத்தாண்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
April 14, 2025
Rating:

.jpeg)

.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment