மன்னார் நானாட்டான் பங்கு மக்கள் கடந்த 7 ஆண்டுகளின் பின்னர் மிக பக்தி உணர்வுடன் வழங்கிய திருப்பாடுகளின் காட்சி.
மன்னார் மறை மாவட்டத்தின் பிரதான பங்குகளின் ஒன்றான நானாட்டான் பங்கு மக்கள் கடந்த 7 ஆண்டுகளின் பின்னர் மிக பக்தி உணர்வுடன் வழங்கிய திருப்பாடுகளின் திருப்பயணிகள் எனும் தலைப்பில் ஆன தவக்கால மேடை ஆற்றுகை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (13) அரங்கேற்றியுள்ளனர்.
நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கு நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய முன்றலில் இடம் பெற்றது.
இந்த ஆற்றுகை நிகழ்விற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார், ஓய்வு நிலை ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார், அருட் சகோதரர்கள் அருட் சகோதரிகள் அருட்பணியாளர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது திருப்பாடுகளின் காட்சி உணர்வுடன் சிறப்பாக இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment