அண்மைய செய்திகள்

recent
-

வயலில் கிடந்த புதிதாக பிறந்த சிசு

 குருநாகல், மாவதகம, பரகஹதெனிய, சிங்கபுர வீதி பகுதியில் வயல் ஒன்றில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 


இன்று காலை வயலில் நடந்து சென்ற கிராமவாசி ஒருவர், வயலில் உள்ள ஒரு மரத்தின் கீழ் புதிதாகப் பிறந்த சிசு ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளார். 

பின்னர் சம்பவம் தொடர்பில் குறித்த நபர் மாவதகம பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். 

அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அங்கிருந்த பெண்களிடம் சிசுவை எடுக்குமாறு கூறினர். எனினும், சம்பவ இடத்திற்கு வந்த ஒரு இளைஞர் தனது டி-சர்ட்டைக் கழற்றி சிசுவை மூடி, அதனைத் தன் கைகளில் எடுத்தார். 

அதன் பிறகு, பொலிஸ் அதிகாரிகளும் அப்பகுதி மக்களும் சேர்ந்து சிசுவை சம்பவ இடத்திலிருந்து எடுத்து மாவதகம வைத்தியசாலையில் அனுமதித்தனர். 





சிசுவை பரிசோதித்த வைத்தியர் ஒருவர், சிசு பிறந்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகியிருக்கும் என்று தெரிவித்தார். 

ஆரம்ப பரிசோதனைகளுக்குப் பிறகு, மாவதகம வைத்தியசாலை அதிகாரிகள் சிசுவை குருநாகல் போதனா வைத்தியசாலையின் ஆரம்ப குழந்தை பராமரிப்பு பிரிவுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்தனர். 

சிசுவை இவ்விடத்தில் யார் கைவிட்டனர் என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்







வயலில் கிடந்த புதிதாக பிறந்த சிசு Reviewed by Vijithan on July 17, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.