இன்று ஆடிப்பிறப்பு ; ஈழத் தமிழர்களின் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு
ஆடிப்பிறப்பு என்ற பண்டிகை ஈழத் தமிழர்கள் வாழ்வியலில் பின்னிப்பிணைந்த நமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு ஆகும் .
ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள்.
ஆடிக்கூழும், கொழுக்கட்டையும் பண்பாட்டு உணவுகள்
ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து உறவுகளுடன் உண்டு மகிழ்வார்கள்.
யாழ்ப்பாணம் மானிபாயை சேர்ந்த நவாலியூர் சோம சுந்தரப்புலவர் பாடிய ஆடிப்பிறப்பு பாடல் மிகவும் சிறப்பு வாய்வந்ததாகும், ஆடிப்பிறப்பின் மகிமையையும் அதன் கொண்டாட்ட்டத்தையும் விள்ளக்கும் வைகியில் அமைந்துள்ளது அடிப்பிறப்பு பாடல்.
இந்நிலையில் வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவர் சிலையடியில் ஆடிப்பிறப்பு நிகழ்வு இன்று (17) இடம்பெற்றது.
வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் மாநகரசபையின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் சோமசுந்தரபுலவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments:
Post a Comment