அண்மைய செய்திகள்

recent
-

மன் -நானாட்டான் டி லா சால் கல்லூரியின் 125 வது ஆண்டு நிறைவையொட்டி இடம் பெற்ற சிறப்பு மருத்துவ முகாம்.

 மன் /டி லா சால் கல்லூரி நானாட்டான் 125 வது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெறும், சிறப்பு நிகழ்வுகளின் ஒன்றாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  (22).காலை 8:30 மணிக்கு சிறப்பு மருத்துவ முகாம் நானாட்டான் டி லா சால் கல்லூரி பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது . 


பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் ஏ.மனோ ரஞ்சிதன் தலைமையில்  குறித்த   மருத்துவ முகாம் இடம் பெற்றது.


இந்த சிறப்பு மருத்துவ முகாம்  இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 125 வது ஆண்டு நிறைவில் தற்போது கால் பதித்துள்ள நிலையில் இடம் பெற்றதோடு, , அதையொட்டி   இதற்கு முன்னரும் பல சிறப்பு நிகழ்வுகள்  இடம் பெற்றுள்ளது.


இந்த ஜூபிலி ஆண்டின் சிறப்பு நிகழ்வாக இப்பிரதேச மக்களுக்கான சிறப்பு மருத்துவமுகாம் இடம்பெற்றது .


 குறித்த மருத்துவ முகாமில் 100க்கும் அதிகமான பயனாளர்கள் பங்கு கொண்டு தமது மருத்துவ தேவைகளை நிறைவு செய்திருந்தனர் .


இந்த மருத்துவ முகாமினை டி லா சால் கல்லூரி சமூகம் அவர்களுடன் இணைந்து பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஆகியோர் இணைந்து முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.















   


மன் -நானாட்டான் டி லா சால் கல்லூரியின் 125 வது ஆண்டு நிறைவையொட்டி இடம் பெற்ற சிறப்பு மருத்துவ முகாம். Reviewed by Vijithan on August 22, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.