துபாய்க்கு தப்பிச் சென்ற இஷார செவ்வந்தி – கைது செய்ய தீவிர விசாரணை
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஷார செவ்வந்தியைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி, சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கொழும்பு குற்றப்பிரிவு அவரை கைது செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் தலைவரான கெஹல்பத்தர பத்மே வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கெஹல்பத்தர பத்மேவின் தகவல்படி, இஷார செவ்வந்தி நாட்டை விட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் இஷார செவ்வந்தி துபாய்க்கு தப்பிச் சென்றதாக கெஹல்பத்தர பத்மே பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு மேலதிகமாக, கொழும்பு குற்றப்பிரிவு மேலும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment