அண்மைய செய்திகள்

recent
-

எக்ஸ் பிரஸ் பேர்ள் ஏற்படுத்திய பாதிப்பிற்கான இழப்பீட்டை வழங்க மறுப்பு

 இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றுதலுக்கு உள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள் (MV X-Press Pearl) கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டை வழங்க அந்த கப்பல் நிறுவனம் மறுத்துள்ளது. 


2021 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் பயணித்த போது சிங்கப்பூருக்கு சொந்தமான (MV X-Press Pearl) கப்பல் தீப்பற்றுதலுக்கு உள்ளானது. 

இதனால் நாட்டின் கடல் வளம் பாரிய அளவில் மாசடைந்ததுடன், கடல் வாழ் உயிரினங்களும் இறந்து கரை ஒதுங்கியிருந்தன. 

அத்துடன் கடல் வளமும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அதற்குரிய இழப்பீடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டும் என அந்த கப்பலின் நிறுவனமான X-Press Feeders நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது. 

அத்துடன் குறித்த இழப்பீட்டு தொகையினை திறைசேரியின் செயலாளரிடத்தில் செலுத்த வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் அந்த பாதிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு அப்போதைய அமைச்சர் நாலக கொடஹேவாவும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையும் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும் அந்த இழப்பீட்டை செலுத்துவதற்கு குறித்த நிறுவனம் மறுப்பு வௌியிட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.







எக்ஸ் பிரஸ் பேர்ள் ஏற்படுத்திய பாதிப்பிற்கான இழப்பீட்டை வழங்க மறுப்பு Reviewed by Vijithan on September 23, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.