ஓரின சேர்க்கையாளர்களை ஊக்குவிக்க கூடாது ; கர்தினால் மெல்கம் ரஞ்சித் விமர்சனம்
இலங்கையின் சுற்றுலாத்துறையில் LGBTQ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்கான அரசாங்கத்தின் நகர்வை கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்று ஆராதனையொன்றின்போது உரையாற்றிய அவர், இத்தகைய நடவடிக்கை நாட்டின் கலாசாரத்தை அழித்துவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
அன்புடன் நடத்தப்பட வேண்டும்
“இங்கு வரும் வெளிநாட்டவர்கள் தமது ஏற்றுக்கொள்ள முடியாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, இலங்கையின் சிறுவர்களையும் இளைஞர்களையும் பலியிடுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கு உடன்படுகிறாரா என்று எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் இந்த பிரச்சினையின் தீவிரத்தை அவர் புரிந்துகொள்வார் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று தெரிவித்தார்.
தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அவர், " தன்பால் ஈர்ப்பு நாட்டங்களுடன் பிறந்தவர்களை நாம் துன்புறுத்தக் கூடாது. அவர்கள் அன்புடன் நடத்தப்பட வேண்டும்.
இருப்பினும், அத்தகைய நாட்டங்களுடன் பிறக்காதவர்கள், கட்டாயத்தின் பேரில் மாறும்படி வற்புறுத்தப்படக் கூடாது," என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
.jpg)
No comments:
Post a Comment