யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவுகூற எவ்வித தடையும் இல்லை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதற்கு அரசாங்கம் எந்த தடையினையும் விதிக்கவில்லை என்றும் நினைவுகூறும் நிகழ்வுகளை இராணுவத்தினர் தடுக்கமாட்டார்கள் என்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார்.
எனினும் அண்மையில் கொழும்பில் கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு அனுமதி இல்லை என குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்ந்தனர்.
அது அவர்களின் ஜனநாயக உரிமையாகவே காணப்பட்டது.
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது.
எனவே இறந்த உறவினர்களை சுகந்திரமாக நினைவு கூர முடியும்
இதற்கு பாதுகாப்பு படையினரும் அதற்கு தடையாக இருக்கமாட்டார்கள் என்று கூறினார்.
Reviewed by Vijithan
on
November 23, 2025
Rating:


No comments:
Post a Comment