புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில் பேராயரின் குற்றச்சாட்டு!
பொருத்தமற்ற பாலியல் கல்வியை நாட்டின் பாடசாலைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம், பிள்ளைகளை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சர்வதேச அமைப்புகளின் அழுத்தத்தின் பேரில், அடுத்த வருடம் (2026) ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மீரிகம, கீனதெனிய பகுதியில் புனரமைக்கப்பட்ட தேவாலயம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
Reviewed by Vijithan
on
November 09, 2025
Rating:


No comments:
Post a Comment