அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடல்

 கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். 

ஏனைய பாடசாலைகளுக்கு ஏற்கனவே விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், உயர் தரப் பரீட்சை நடத்தப்படாத முஸ்லிம் பாடசாலைகள் மாத்திரம் இயங்கி வந்தன. 

அதேவேளை நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (26) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடல் Reviewed by Vijithan on November 26, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.