ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் போராட்டம்.
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இன்றைய தினம் ( 23) ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஈழத்தமிழர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் (Andrew Patrick) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான கடந்த வெள்ளிக்கிழமை (14) முற்பகல் பத்தரமுல்ல பெலவத்த யில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் சந்திப்பு இடம் பெற்றது.
இதன் போது இலங்கையின் நிகழ்கால அரசியல் நிலைமைகள் பற்றியும் பிரித்தானியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவு பற்றியும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
குறிப்பாக பிரித்தானியா எதிர்காலத்தில் இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இம்மாதம் பிரித்தானியாவுக்கு சுற்று பயணமொன்றை மேற்கொள்ளவுள்ள துடன் இதன்போது அது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிலையில் அவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23) பிரித்தானியாவுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை முன்னெடுத்த தாகவும் இதன் போதே ஈழத்தமிழர்கள் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததாகவும் தெரிய வருகின்றது.
Reviewed by Vijithan
on
November 23, 2025
Rating:

.jpeg)

.jpeg)


No comments:
Post a Comment