மன்னார் மாவட்ட செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவ தொடர்பான அவசர ஒருங்கிணைப்பு கலந்துரையாடல்
மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று மாலை 3.00 மணிக்கு, மாவட்ட செயலாளர் அவர்கள் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ தொடர்பான அவசர ஒருங்கிணைப்பு கூட்டம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் , அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர், பாதுகாப்பு படையினர், பிரதேச செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய அரச அமைப்புகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் நிலவும் அனர்த்த நிலை, நடைபெற்று வரும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், வெளியேற்ற திட்டங்கள், அவசர கால தேவைகள், வளங்கள் மற்றும் மீட்பு அணிகளின் தயார்நிலை போன்ற அம்சங்கள் சிறப்பு கவனத்துடனும் பரிசீலிக்கப்பட்டன.
மன்னார் மாவட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து துறைகளும் ஒருமித்த அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என மாவட்ட செயலாளர் அவர்கள் வலியுறுத்தினார்.
Reviewed by Vijithan
on
November 27, 2025
Rating:











No comments:
Post a Comment