அளவுக்கு அதிகமாக இரத்த தானம் செய்த இலங்கை மக்கள் – நெகிழ்ச்சியடைந்த வைத்தியர்
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து வழங்கப்பட்ட இரத்த தானங்களுக்காக இலங்கை குடிமக்களுக்கு தேசிய இரத்த வங்கி தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய இரத்த வங்கியின் இயக்குநர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க, மூன்று நாட்களுக்குள் 20,000க்கும் மேற்பட்ட இரத்த தானங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு 1500 இரத்த தானம் தேவை என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும், ஆனால் தேவையான அளவை விட அதிகமான இரத்த தானம் செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய இரத்த இருப்பு அடுத்த 15 நாட்களுக்கு போதுமானது என்றும், இதனால் தேசிய இரத்த வங்கியின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தேவைப்படும் நேரத்தில் தேசிய இரத்த வங்கிக்கு உதவிய அனைத்து குடிமக்களுக்கும் ஊடகங்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களுக்கு இரத்த தானம் தேவையில்லை என்று கூறிய தேசிய இரத்த வங்கி இயக்குநர், பொதுமக்கள் வழக்கமான இரத்த தான செயல்முறைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டார்.
Reviewed by Vijithan
on
December 03, 2025
Rating:


No comments:
Post a Comment