தரையிறங்கும் போது விபரீதம்; நுவரெலியா ஏரியில் வீழ்ந்த விமானம்
நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்று இன்று (07) பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது.
விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளையும், ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தவர்கள் மீட்டுள்ளனர்.
தரையிறங்கும் போது விபரீதம்; நுவரெலியா ஏரியில் வீழ்ந்த விமானம்
Reviewed by Vijithan
on
January 07, 2026
Rating:
Reviewed by Vijithan
on
January 07, 2026
Rating:


No comments:
Post a Comment