அண்மைய செய்திகள்

recent
-

ஆறாம் வகுப்பு புத்தக பிரச்சினைக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்

 கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும், கொட்டகலை வர்த்தக சங்கத் தலைவரும், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளருமான விஸ்வநாதன் புஸ்பாவின் ஏற்பாட்டில், கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 500 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (04) கொட்டகலை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது. 


 


இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார். 


 


மேலும் இந்நிகழ்வில் பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொட்டகலை வர்த்தகர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 


 


இதன்போது கருத்துத் தெரிவித்த  அவர், ஆறாம் வகுப்பு புத்தக பிரச்சினைக்கு பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.




ஆறாம் வகுப்பு புத்தக பிரச்சினைக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் Reviewed by Vijithan on January 04, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.