டக்ளஸ் மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில்
நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவர்களது இரண்டு மகன்களும் தற்போது மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை தவல்களை கோடிட்டு சிங்கள ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்களின் குடும்பத்தினர் வீட்டிலிருந்து உணவு கொண்டு வர சிறை அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாளிலிருந்து மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான உணவைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அவர் தினமும் பயன்படுத்தும் மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
January 07, 2026
Rating:


No comments:
Post a Comment