அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இருந்து வில்பத்து ஊடாக புத்தளம் செல்கின்ற பிரதான வீதி -அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக பாதை விடுவிப்பு பின்னடைவு-

 மன்னாரில் இருந்து வில்பத்து ஊடாக புத்தளம் செல்கின்ற பிரதான வீதி தொடர்பாக ஜனாதிபதி அதி கரிசனை காட்டியுள்ள போதும் உறிய அதிகாரிகளின் அசமந்த போக்கு  காரணமாக குறித்த பாதை விடுவிப்பு பின்னடைவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மன்னார் புத்தளம் பிரதான வீதி,சிவில் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (17) மாலை மன்னாரில் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.


-இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே குறித்த குறித்த அமைப்பின் பிரதி நிதிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.


அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,,

 

எழுங்குளம் ஊடாக மன்னார்- புத்தளம் பிரதான வீதி கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் மூடப்பட்டுள்ள நிலையில் மக்களின் போக்குவரத்து பாவனைக்கு வழங்கப்படாத நிலையில் மக்களின் போக்குவரத்து தேவைக்காக குறித்த வீதி திறக்கப்பட வேண்டிய நியாயத்தை நாங்கள்  கூறி கொள்ள விரும்புகின்றோம்.


மன்னாரில் இருந்து மறிச்சிக்கட்டி ஊடாக புத்தளம் செல்கின்ற குறித்த பாதை ஊடாக சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தை செலவிட வேண்டும்.


ஆனால் 5 மணி நேரம் கடந்து தற்போது குறித்த பகுதிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இவ்வியைம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு,தற்போது இந்த நாட்டில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருவதோடு,பாதை சீரமைப்பு களும் முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


எனினும் மன்னார் மாவட்டம் முசலி பிரதேசத்தில் உள்ள மக்கள் உள்ளடங்களாக வடக்கில் உள்ள மக்கள் வில்பத்து ஊடாக மன்னார் புத்தளம் நோக்கி பிரதான வீதியூடாக பயணங்களை முன்னெடுக்க வேண்டும்.


இதன் ஊடாக  மக்கள் போக்குவரத்து கெடுபிடிகளை குறைப்பது மற்றும் பொருளாதார ரீதியாக பல்வேறு நன்மைகளையும் அடைந்து கொள்ள முடியும்.


மன்னார்- புத்தளம் பிரதான வீதி,தேசிய வில்பத்து பிரதான வீதியூடாக செல்லக்கூடிய பிரதான வீதியாக காணப்பட்டாலும்,புத்தளத்தில் இருந்து கதிர்காமத்திற்கு செல்கின்ற போது குறித்த வீதிகளில்  எந்த நேரமும்  விலங்குகள் காணப்படுகின்றது.


எனினும் மன்னாரில் இருந்து வில்பத்து ஊடாக புத்தளம் செல்கின்ற போது பல தடவைக்கு ஒரு தடவை மாத்திரமே விலங்குகள் செல்வதை அவதானிக்க முடிகிறது.


இதனால் மன்னார்-வில்பத்து ஊடாக புத்தளம் செல்கின்ற பிரதான வீதி வன விலங்குகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படுத்துவதாக தெரியவில்லை.


எனவே மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்து கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் மன்னார் வில்பது ஊடாக பிரதான வீதியை திறந்து மக்களின் இலகுவான போக்கு வரத்துக்கு வழி வகுக்க வேண்டும்.என குறித்த அமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.








மன்னாரில் இருந்து வில்பத்து ஊடாக புத்தளம் செல்கின்ற பிரதான வீதி -அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக பாதை விடுவிப்பு பின்னடைவு- Reviewed by Vijithan on January 17, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.