அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பல டொன் பழுதடைந்த சோள விதைகள்-சட்டவிரோத சத்துணவு தயாரிப்பதற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகம்!

 மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் உரிய அனுமதியின்றி வீதி மற்றும் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் பழுதடைந்த மற்றும் பூஞ்சைகள் நிறைந்த பல ஆயிரம் டொன் சோள விதைகள் களஞ்சிய படுத்தப்பட்டிருந்த   நிலையில் மன்னார் சுகாதார துறையினர் குறித்த களஞ்சிய சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


மன்னார் நடுக்குடா பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக அதிகளவான சோள விதைகள் உலர விடப்பட்டுள்ளதாக பொது மக்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது மனித நுகர்வுக்கு பொருத்த மற்ற சோள விதைகள் உலரவிடப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.


அதே நேரம் குறித்த களஞ்சிய சாலைக்கோ அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கோ எந்த ஒரு சட்ட அனுமதியோ அல்லது சுகாதார மருத்துவ சான்றிதலோ பெறப்படவில்லை என்றும் முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.


அதே நேரம் இவ்வளவு தொகை பழுதடைந்த சோள விதைகள் எவ்வாறு எந்த ஒரு அனுமதியும் இன்றி மன்னார் மாவட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் இந்த விதைகளை எதற்காக கொண்டு வந்தார்கள் என்பது தொடர்பில் மேலதிக விபரங்களை மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆய்வு செய்து வருகின்றது.







மன்னாரில் பல டொன் பழுதடைந்த சோள விதைகள்-சட்டவிரோத சத்துணவு தயாரிப்பதற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகம்! Reviewed by Vijithan on February 23, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.