மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் "சவேரியன் முகிழூம் வெளி" கலைக் கண்காட்சி ஆரம்பம்
மன்னாரின் பிரபல பாடசாலை களில் ஒன்றான மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் (National School) ஏற்பாட்டில், மாணவர்களின் மறைந்த மற்றும் வெளிப்படுத்தப்படாத பன்முகத் திறமைகளை வெளிக்கொணரும் "சவேரியன் முகிழூம் வெளி" எனும் விஷுவல் ஆர்ட்ஸ் (Visual Art Exhibition - 2026) கண்காட்சி இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை பாடசாலையின் ஜோசப் மண்டபத்தில் ஆரம்பமானது.
கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் ச. சாந்தியாகு (Rev.Bro.S. Santhiyagu Fsc) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் கிறிஸ்து நேசரத்தினம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். வைத்தார்.
இந்நிகழ்வில் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான . ஜி. ஆத்தவன், திருமதி. எஸ். சுதர்சினி மற்றும் கல்வி வலயத்தின் நடன ஆசியுரை திருமதி. எல். எஸ். ஏ. ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவர்களின் கற்பனைத்திறனுக்கு உயிர் கொடுக்கும் வகையில் ஓவியங்கள், சிற்பங்கள், மரச் செதுக்கல் கள் உள்ளிட்ட பல நுண்கலை ஆக்கங்கள் இக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான இந்த அற்புதமான கலைப் படைப்புகள் பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகின்றன.
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக
செவ்வாய்க்கிழமை (28): காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை. புதன்கிழமை (29): காலை 8:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது
மாணவர்களின் திறமைகளை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தும் இக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDEC), பழைய மாணவர் சங்கம் (OBA) மற்றும் மாணவர்கள் இணைந்து மிகச் சிறப்பாக செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
July 28, 2026
Rating:

.jpeg)

.jpeg)


No comments:
Post a Comment