மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை அதிபரை மாற்றக் கோரி பெற்றோர்கள் மாணவர்கள் இரண்டவது நாளாக போராட்டம்
அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து பாடசாலையைப் புறக்கணித்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முறையான தீர்வு கிடைக்கும் வரை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப போவதில்லை என பெற்றோர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை அதிபரை மாற்றக் கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில், இன்றைய தினம் (23) பெற்றோர்கள் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாது புறக்கணித்துள்ளனர்.
அதிபர் விவகாரம் தொடர்பில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் சூழலில், இன்றைய தினம் (23) பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். அதன்படி, குறித்த பாடசாலைக்கு வெறும் 10 மாணவர்களே வருகை தந்திருந்தனர்.
தமக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப போவதில்லை என பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
இடம்பெற்றுவரும் இந்த விடயம் தொடர்பாக மன்னார் வலய கல்விப் பணிப்பாளரிடம் வினவிய போது
குறித்த பாடசாலை அதிபர் விவகாரம் தொடர்பாக தொடர்ச்சியாகப் போராட்டங்கள் இடம்பெற்று வருவது எமது கவனத்திற்கு வந்துள்ளது.
இது குறித்துப் பாடசாலை சமூகத்தினர், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை இணைத்து விரைவில் ஒரு கலந்துரையாடலை மேற் கொள்ளவுள்ளோம்.
அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான முழுமையான அறிக்கை மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் மத்திய கல்வி அமைச்சுக்கு விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்." என தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் தொடர்ந்து பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது பெற்றோர் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்
Reviewed by Vijithan
on
July 23, 2026
Rating:


No comments:
Post a Comment